Asianet News TamilAsianet News Tamil

IND vs BAN: அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டம் காட்டிய வங்கதேச அணி – விக்கெட் எடுக்க போராடிய இந்தியா!

இந்தியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஒவர்கள் முடிவில் 256 ரன்கள் குவித்துள்ளது.

Bangladesh Scored 256 Runs against India in 17th Cricket World Cup Match at Pune rsk
Author
First Published Oct 19, 2023, 6:36 PM IST | Last Updated Oct 19, 2023, 6:36 PM IST

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான 17ஆவது லீக் போட்டி தற்போது புனேயில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்தது. அதன்படி, தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக அடிக்கத் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன்னும், 2ஆவது ஓவரில் 4 ரன்னும், 3ஆவது ஓவரில் மெய்டன், 4ஆவது ஓவரில் 1 ரன்னும், 5ஆவது ஓவரில் 4 ரன்னும், 6ஆவது ஓவரில் 9 ரன் என்று மொத்தமாக 6 ஓவர்களில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.

உலகக் கோப்பையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ட்னர்ஷிப்பில் வங்கதேச அணி புதிய சாதனை!

அடுத்த 4 ஓவர்களுக்கு வங்கதேச அணியானது, 44 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக முதல் 10 ஓவர்களுக்கு வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் குவித்தனர். இதில், தன்ஷித் அகமது 41 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

India vs Bangladesh: கண்ணாடி போட்டுக் கொண்டே 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் பந்து வீசிய விராட் கோலி!

அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 3 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 66 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த தவ்ஹீத் ஹிரிடோய் 16 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து மஹ்முதுல்லா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 36 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் குவித்தார். கடைசியாக நசும் அகமது 14 ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 256 ரன்கள் குவித்தது. இதில் ஷோரிஃபுல் இஸ்லாம் கடைசியாக 7 ரன்னிலும், முஷ்தாபிஜூர் ரஹ்மான் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

India vs Bangladesh: பந்து வீசிக் கொண்டிருந்த போது பாதியிலேயே வெளியேறிய ஹர்திக் – தக்க சமயத்தில் உதவிய கோலி!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணியின் பீல்டிங் இன்றைய போட்டியில் சூப்பராக இருந்தது. இதில், விக்கெட் கீப்பர் டைவ் அடித்து ஒரு கேட்ச் பிடித்தார். இதே போன்று ரவீந்திர ஜடேஜாவும் ஒரு கேட்ச் பிடித்து தனக்கு சிறந்த பீல்டிங்கிற்காக மெடல் வேண்டும் என்று மைதானத்திலேயே பீல்டிங் பயிற்சியாளரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார்.

IND vs BAN: ஷாகிப் அல் ஹசன் காயம்; 2 மாற்றங்களுடன் களமிறங்கும் வங்கதேசம் – டாஸ் வென்று பேட்டிங்!

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட் கைப்பற்ற திணறிய நிலையில் குல்தீப் யாதவ் முதல் விக்கெட்டை கைப்பற்றிக் கொடுத்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. மேலும், ரன்களும் கொடுக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios