IPL 2023: ஐபிஎல் 16வது சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! அடித்துச்சொல்லும் மைக்கேன் வான்

ஐபிஎல் 16வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

michael vaughan predicts csk will win trophy in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் அபாரமாக ஆடினாலும் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துவருகின்றன. டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகள் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி 3 இடங்களில் உள்ளன.

5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியன் சிஎஸ்கே அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவரும் நிலையில், வழக்கம்போலவே ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஆடிவருகின்றன.

IPL 2023: தோனியின் கேப்டன்சியில் ஆடினால் எதையும் சாதிக்கலாம் - அஜிங்க்யா ரஹானே(2.0)

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் டேவிட் வார்னரின் கேப்டன்சியில் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் 5 போட்டிகளிலும் தோற்று 6வது போட்டியில் முதல் வெற்றியை பெற்று, இந்த சீசனில் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

கோப்பையை வெல்லும் முனைப்பில் வலுவான அணிகள் அபாரமாக ஆடிவரும் நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணி தான் கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வான் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இந்த சீசன் தான் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதால் கோப்பையுடன் வெளியேறும் முனைப்பில் அவரும், சிஎஸ்கே அணி நிர்வாகமும் உள்ளனர். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக வலுவாக உள்ளது. டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகின்றனர். 

என் வாழ்வில் நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் தான்..! கோலியை அவருடன் ஒப்பிட முடியாது - ரிக்கி பாண்டிங்

மிடில் ஆர்டரில் அஜிங்க்யா ரஹானே வேற லெவலில் பேட்டிங் ஆடிவருகிறார். அவருடன் ஷிவம் துபேவும் அபாரமாக ஆடிவருகிறார். மொயின் அலி, ஜடேஜா ஆகியோரும் அடி வெளுத்துவாங்குவதால் பேட்டிங் மிக வலுவாக உள்ளது. தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி ஆகிய இருவரும் இந்த சீசனில் ஆடவில்லை என்றாலும், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசுவதால் அவர்களை சிறப்பாக பயன்படுத்தி வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார் தோனி. சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவரும் நிலையில், அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வான் கணித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios