பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, மார்டின் கப்டிலின் அதிரடி சதத்தால்(117) 20 ஓவரில் 168 ரன்கள் அடித்து, 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை கராச்சி கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கராச்சியில் நடந்துவரும் இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸும் குவெட்டா கிளாடியேட்டர்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

கராச்சி கிங்ஸ் அணி:

ஷர்ஜீல் கான், ஜேம்ஸ் வின்ஸ், ஹைதர் அலி, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), இர்ஃபான் கான், ஷோயப் மாலிக், இமாத் வாசிம் (கேப்டன்), அமீர் யாமின், ஆண்ட்ரூ டை, முகமது அமீர், இம்ரான் தாஹிர்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:

ஜேசன் ராய், மார்டின் கப்டில், அப்துல் பங்கல்ஸாய், சர்ஃபராஸ் அகமது (கேப்டன், விக்கெட் கீப்பர்), உமர் அக்மல், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஒடீன் ஸ்மித், காயிஸ் அகமது, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

IND vs AUS: அவுட்டா இல்லையா..? சர்ச்சையை கிளப்பிய விராட் கோலியின் விக்கெட்..! கோலி அதிருப்தி

முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அப்துல் பங்கல்ஸாய்(0), உமர் அக்மல்(4), சர்ஃபராஸ் அகமது (5) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக ஆடிய மார்டின் கப்டில் அரைசதம் அடித்தார்.

அதிரடி வீரரான மார்டின் கப்டில், அண்மைக்காலமாக பெரியளவில் சோபிக்காமல் இருந்துவந்த நிலையில், இந்த போட்டி அவருக்கான கம்பேக் போட்டியாக அமைந்தது. ஆரம்பத்தில் நிதானம் காத்த கப்டில், அரைசதத்திற்கு பின் கராச்சி கிங்ஸ் பவுலிங்கை காட்டடி அடித்து சதம் விளாசினார். அரைசதத்திற்கு பின் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கப்டில், 67 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 117 ரன்களை குவித்தார். அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஃப்டிகார் அகமது ஓரளவிற்கு ஆடி 32 ரன்கள் பங்களிப்பு செய்தார்.

IND vs AUS: உன் பேட்டிங்கில் இதுதான்டா தம்பி பெரிய பிரச்னையே..! அதை சரி செய்.. ராகுலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

மார்டின் கப்டிலின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை கராச்சி கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.