MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: உன் பேட்டிங்கில் இதுதான்டா தம்பி பெரிய பிரச்னையே..! அதை சரி செய்.. ராகுலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

IND vs AUS: உன் பேட்டிங்கில் இதுதான்டா தம்பி பெரிய பிரச்னையே..! அதை சரி செய்.. ராகுலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் கேஎல் ராகுலின் பேட்டிங் டெக்னிக்கில் உள்ள குறையை சுட்டிக்காட்டி அறுவுரை கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். 

2 Min read
Author : karthikeyan V
Published : Feb 18 2023, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுலின் தேர்வு விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இங்கிலாந்து தொடரிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் நன்றாக ஆடிய ராகுல், அதன்பின்னர் ஃபார்மை இழந்தார். 2022லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாத அதேவேளையில், டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் அணியில் இருந்தும் அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை
 

34

முதல் போட்டியில் சரியாக ஆடாமல் ராகுல் சொதப்பியதுமே, 2வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில்லைத்தான் ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. ராகுல் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறியது கவாஸ்கர் தான். 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் அவர் வெறும் 17 ரன்னுக்கு நேதன் லயனின் சுழலில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றிய நிலையில், அவருக்கு கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக புதிய மைல்கல்..! லெஜண்ட் பட்டியலில் 3ம் இடம் பிடித்தார் நேதன் லயன்

44

ராகுல் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஸ்பின் பவுலிங்கை ஆடும்போது ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடுவதா, பேக் ஃபூட்டில் ஆடுவதா என்பது குறித்து ராகுலுக்கு தெளிவில்லை; குழப்பமடைந்துவிடுகிறார். ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடும்போது ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். ஆனால் ராகுல் ஃப்ரண்ட் ஃபூட்டில் அக்ராஸ் ஆடுகிறார். அப்படி ஆடும்போது பந்தை தவறவிட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடும்போது ஸ்டிரைட் பேட்டில் ஆடுகிறார். அதனால் தான் அவரால் சிறப்பாக ஆடமுடிகிறது. ராகுல் அந்த விஷயத்தில் தவறு செய்வதாக கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

About the Author

KV
karthikeyan V
கே. எல். ராகுல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய திலக் வர்மா! களத்தில் பெரும் மோதல்! வைரலாகும் வீடியோ!
Recommended image2
Women's Asia Cup: பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் அணி! ஆசியக் கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி!
Recommended image3
Asia Cup 2026: இந்திய பவுலர்கள் சுழலில் சிக்கிய பாகிஸ்தான்... வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved