MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை

IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 262 ரன்கள் அடித்துள்ளது. ஒரு ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை ஆடுகிறது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Feb 18 2023, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக ஆடினர். உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடித்தனர். கம்மின்ஸ் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக புதிய மைல்கல்..! லெஜண்ட் பட்டியலில் 3ம் இடம் பிடித்தார் நேதன் லயன்
 

35

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஷமி 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
 

45

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நேதன் லயனிடம் சரணடைந்தது. ரோஹித் சர்மா(32), கேஎல் ராகுல்(17), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) மற்றும் கேஎஸ் பரத் (6) ஆகிய 5 வீரர்களையும் நேதன் லயன் வீழ்த்தினார். கோலி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 44 ரன்கள் அடித்தார். 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

NZ vs ENG: 2வது இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராடிடம் சரிந்த நியூசி., பேட்டிங் ஆர்டர்..! இங்கிலாந்தின் வெற்றி உறுதி

55

அதன்பின்னர் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். அஷ்வின் 37 ரன்கள் அடித்தார். மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 74 ரன்களை அடிக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை குவித்தது. ஒரு ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை ஆடுகிறது.

About the Author

KV
karthikeyan V
அக்சர் படேல்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved