AUS vs WI: 2வது டெஸ்ட்டில் லபுஷேன், டிராவிஸ் ஹெட் அபார சதம்.. கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மார்னஸ் லபுஷேன் அபாரமாக ஆடி சதமடித்தார். இந்த போட்டியில் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படும் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட், ஒருநாள் போட்டி அட்டவணை வெளியீடு
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசெர், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), சந்தர்பால், ஷமர் ப்ரூக்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டெவான் தாமஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், அல்ஸாரி ஜோசஃப், ஆண்டர்சன் ஃபிலிப், மார்குயினோ மைண்ட்லி.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமும், சதமும் அடித்த மார்னஸ் லபுஷேன், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்தார். 5ம் வரிசையில் இறங்கிய டிராவிஸ் ஹெட்டும் அபாரமாக ஆடி சதமடித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா
லபுஷேன் - ஹெட் ஆகிய இருவருமே சதமடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் அடித்துள்ளது. லபுஷேன் 120 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.