சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த சீசனின் 3வது போட்டி இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
நெல்லையில் நடக்கும் இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸிடம் தோல்வியடைந்த சேப்பாக் அணி, வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மதுரை பாந்தர்ஸ் அணி:
என்.எஸ்.சதுர்வேத் (ஏப்டன்), அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆதித்யா, பாலசந்தர் அனிருத், ஔஷிக் ஸ்ரீநிவாஸ், கிரண் ஆகாஷ், ஜெகதீசன் கௌஷிக், கே ராஜ்குமார், ஆர் சிலம்பரசன், சன்னி சந்து, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க - நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:
கௌஷிக் காந்தி (கேப்டன்), என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஆர் அலெக்ஸாண்டர், எஸ் ஹரிஷ் குமார், ஜெகநாத் ஸ்ரீநிவாஸ், சந்தீப் வாரியர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், எஸ் சுஜய்.
