Asianet News TamilAsianet News Tamil

TNPL 2023 Final: டிஎன்பிஎல் ஃபைனல்: லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்; என்ன செய்யப் போகிறது நெல்லை?

டிஎன்பிஎல் தொடரின் ஃபைனலில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Lyca Kovai Kings Won the toss and Choose to bat first against Nellai Royal Kings in TNPL 2023 Final Match at Tirunelveli
Author
First Published Jul 12, 2023, 7:01 PM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில், லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பிளேயர்ஸ் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறாங்க?

லைகா கோவை கிங்ஸ்:

எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன், யுதீஸ்வரன்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்.எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்

பாகுபலி மியூசிக்குடன் வைரலாகும் டிஎன்பிஎல் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை வீடியோ: கோவையா? நெல்லையா?வெற்றி யாருக்கு?

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி 3 போட்டிகளிலும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில், லைகா கோவை கிங்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து டைட்டில் வென்றுள்ளது.

டிராபி யாருக்கு? டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் பலப்பரீட்சை!

ஆனால், நெல்லை ராயல் கிங்ஸ் அணி இதுவரையில் ஒரு முறை கூட டைட்டில் பெறவில்லை. இந்த முறை கண்டிப்பாக டைட்டில் பெறுவதற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடுமையாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிக்கு வந்த 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சம் வீதம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!

Follow Us:
Download App:
  • android
  • ios