சேப்பாக்கத்திற்கு ஆப்பு வச்ச லைகா கோவை கிங்ஸ்: அதிரடி காட்டிய சாய் சுதர்சன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் நாட் அவுட்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் முதலில் வருவதற்கு கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!
தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 9ஆது டிஎன்பிஎல் லீக் போட்டி திண்டுக்கல் பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆளாளுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அதிகபட்சமாக எஸ் ஹரீஸ் குமார் 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து உதிரசாமி சசிதேவ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சேப்பாக்கம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாய் சுதர்சன் சதம் அடிப்பாரா? லைகா கோவை கிங்ஸ் பீல்டிங்!
இதையடுத்து 127 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட லைகா கோவை கிங்ஸ் அணி ஆடியது. இதில் தொடக்க வீரர் விக்கெட் கீப்பரான ஜே சுரேஷ் குமார் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்சர் உள்பட 64 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!