சேப்பாக்கம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாய் சுதர்சன் சதம் அடிப்பாரா? லைகா கோவை கிங்ஸ் பீல்டிங்!
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் முதலில் வருவதற்கு கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது.
உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!
இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இதில், ஹாட்ரிக் வெற்றி பெற சேப்பாக்கம் அணியும், 2ஆவது வெற்றி பெற லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
லைகா கோவை கிங்ஸ்:
ஆதிக் ரஹ்மான், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), ராம் அரவிந்த், ஷாருக்கான் (கேப்டன்), எம் முகமது, யு முகிலேஷ், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், ஜதாவத் சுப்ரமண்யன், கே கௌதம் தாமரை கண்ணன்.
உலகக் கோப்பை வில்வித்தையில் 3ஆவது முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வர்மா!
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:
பிரதோஷ் பால், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்/ கேப்டன்), பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், எஸ் ஹரிஷ் குமார், உதிரசாமி சசிதேவ், ராஹில் ஷா, ராமலிங்கம் ரோகித், சந்தோஷ் ஷிவ், எம் சிலம்பரசன், எம் விஜூ அருள்
ருதுராஜ் கெய்க்வாட் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்!