ருதுராஜ் கெய்க்வாட் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்!
மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் நடந்து வரும் நிலையில், நேற்றைய போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட்டின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்து வணங்கியுள்ளார்.
சச்சின், கவாஸ்கர், கபில்தேவ், கங்குலி, சேவாக், ரோகித் சர்மா, தோனி, விராட் கோலி ஆகியோரது காலில் ரசிகர்கள் விழுந்து வணங்கியதை பார்த்திருப்போம். கிரிக்கெட் விளையாடினாலும், இல்லாவிட்டாலும், ஒவ்வொருவருக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கிரிக்கெட் வீரர்களை கடவுளாக பார்க்கும் நிலை நம் நாட்டில் இருக்கிறது. ஆனால், இளம் வீரராக பெரியளவில் இன்னும் சாதிக்காத ஒருவர் காலில் ரசிகர் விழுந்து வணங்கியது பெரும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுக்கப்படுகிறது.
யூடியூப் சேனலுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த யுஸ்வேந்திர சாஹல்!
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் ருதுராஜ் கெய்க்வாட். தோனியின் ஓய்விற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கேயின் அடுத்த கேப்டனாகவும் வருவார் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தமிழக முறைப்படி தனது திருமணத்தையும் ருதுராஜ் கெய்வாட் நடத்தி சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
டைவ் அடித்து கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின்; அப்படியிருந்தும் தோல்வி அடைந்த சீகம் மதுரை பாந்தர்ஸ்!
ஐபிஎல், டிஎன்பிஎல் தொடரைப் போன்று மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் எனப்படும் எம்பிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில், புனேரி பாப்பா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். நேற்று புனேரி பாப்பா மற்றும் சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து கௌசிக் காந்தி சாதனை!
இந்தப் போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் காலில் ரசிகர் ஒருவர் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் புனேரி பாப்பா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் நடந்த 2 போட்டிகளிலும் புனேரி பாப்பா அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆவது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ்: பாபா இந்திரஜித் அதிரடியால் திண்டுக்கல் வின்!