2ஆவது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ்: பாபா இந்திரஜித் அதிரடியால் திண்டுக்கல் வின்!
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ்:
ஷிவன் சிங், விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், பி சரவணக் குமார், எஸ் அருண், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சி சரத் குமார்.
சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!
சீகம் மதுரை பாந்தர்ஸ்:
எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், எஸ் ஸ்ரீ அபிஷேக், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன், தேவ் ராகுல், குர்ஜாப்னீத் சிங்
அதன்படி முதலில் ஆடிய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், ஜே கௌசிக் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆடியது. இதில் தொடக்க வீரர்கள் ஷிவம் சிங் 9 ரன்னிலும், விமல் குமார் 6 ரன்னிலும், எஸ் அருண் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இவருக்கு பக்கபலமாக ஆதித்யா கணேஷ் சிங்கிள் தட்டி கொடுக்க, பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 78 ரன்கள் குவித்தார். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீகம் மதுரை பாந்தர்ஸ்க்கு எதிரான போட்டி: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!
இந்த வெற்றியின் மூலமாக டிஎன்பிஎல் தொடரில் 2ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், சீகம் மதுரை பாந்தர்ஸ் 2ஆவது முறையாக தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
அபிஷேக் தன்வரின் அபாரமான பௌலிங்; கௌசிக் காந்தியின் அரைசதம்: சேலம் ஸ்பார்டன்ஸ் சிம்பிள் வெற்றி!