சீகம் மதுரை பாந்தர்ஸ்க்கு எதிரான போட்டி: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டி திண்டுக்கல் பகுதியிலுள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
அபிஷேக் தன்வரின் அபாரமான பௌலிங்; கௌசிக் காந்தியின் அரைசதம்: சேலம் ஸ்பார்டன்ஸ் சிம்பிள் வெற்றி!
திண்டுக்கல் டிராகன்ஸ்:
ஷிவன் சிங், விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், பி சரவணக் குமார், எஸ் அருண், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சி சரத் குமார்.
சீகம் மதுரை பாந்தர்ஸ்:
எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், எஸ் ஸ்ரீ அபிஷேக், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன், தேவ் ராகுல், குர்ஜாப்னீத் சிங்
இதற்கு முன்னதாக நடந்த பா11சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஒரே பந்தில் பேட்ஸ்மேனும், பௌலரும் மாறி மாறி டிஆர்எஸ் கேட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில், நாட் அவுட் மட்டுமே இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
மணி பாரதி எடுத்த 40: பா11சி திருச்சி 139 ரன்கள் குவிப்பு!