மணி பாரதி எடுத்த 40: பா11சி திருச்சி 139 ரன்கள் குவிப்பு!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் பா11சி திருச்சி அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதையடுத்து கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் களமிறங்கினர். இதில், இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பிரான்சிஸ் ரோகின்ஸ் மற்றும் மணி பாரதி இருவரும் நிலைத்து நின்று ஆடினர். எனினும், ரோகின்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மணி பாரதி மட்டும் பொறுமையாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே, பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்தது.
ரூ.7 லட்சத்திற்கு புதிதாக வாட்ச் வாங்கிய விராட் கோலி: வைரலாகும் இன்ஸ்டா பிக்ஸ்!
பந்து வீச்சு தரப்பில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் கேப்டன் அபிஷேக் தன்வர் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து மற்றும் ரவி கார்த்திகேயன் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கணேஷ் மூர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்
இங்கிலாந்தை பீதியடையச் செய்த உஸ்மான் கவாஜா: முதல் வீரராக சதம் அடித்து சாதனை!