உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!
உலகக் கோப்பையில் இடம் பெறும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில், 10 அணிகள் இடம் பெறும். ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இடம் பெறும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டி நாளை ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் ஜூலை 9 ஆம் தேதி தொடங்குகிறது.
ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாகவே தகுதி பெற்றது. இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆளாளுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
இதில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன. குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன.
சேப்பாக்கம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாய் சுதர்சன் சதம் அடிப்பாரா? லைகா கோவை கிங்ஸ் பீல்டிங்!
இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் மொத்தம் 20 போட்டிகள் நடக்கும். அதன் பிறகு இந்த இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஒவ்வொரு அணியும் விளையாடாத அணிகளுடன் போட்டியிடும்.
உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!
இதில் கடைசியாக இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் 2 அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டி: நேபாள் – ஜிம்பாப்வே
நேபாள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் நேபாள் அணி வீரர் குஷால் புர்டெல் 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
உலகக் கோப்பை வில்வித்தையில் 3ஆவது முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வர்மா!
ஜிம்பாப்வே:
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின் 128 பந்துகளில் 15 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 121 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் – யுனிடேட் ஸ்டேட்ஸ்:
அமெரிக்க வீரர் கஜானந்த் சிங் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். எனினும், இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை – ஐக்கிய அரபு நாடுகள்:
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து – ஓமன்
ஓமன் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளது.
இதில் ஓமன் அணியில் தொடக்க வீரர் காஷ்யப் பிரஜாபதி 72 ரன்கள் எடுத்தார். அஹிப் இல்யாஸ் 52 ரன்களும், ஜீஷன் மக்சூத் 59 ரன்களும் எடுத்தனர். நாளை ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் 5ஆவது போட்டியும், நேபாள் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலாஅ 6ஆவது போட்டியும் நடக்கிறது.