லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!
லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக நடந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதே போன்று நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பு!
இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று இரவு 7.15 மணிக்கு கோவையில் உள்ள எஸ்.எஸ்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
லைகா கோவை கிங்ஸ்:
பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், முகிலேஷ், ஆதீக் ரஹ்மான், ஷாருக்கான் (கேப்டன்), முகமது கிரண் ஆகாஷ், சித்தார்த், ஜதாவேத் சுப்ரமண்யன், கே கௌதம் தாமரை கண்ணன், சுஜய், வள்ளியப்பன் யோதீஸ்வரன், பி வித்யுத், கே எம் ஓம் பிரகாஷ், ஹேம்சரண், ஆர் திவாகர்
நெல்லை ராயல் கிங்ஸ்:
ஸ்ரீ நிரஞ்சன், அருண் கார்த்திக் (கேப்டன்), நிதிஷ் ராஜகோபால், எஸ் ஜே அருண் குமார், சோனு யாதவ், அஜிதேஷ் குருசாமி, ரிதிக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), கார்த்திக் மணிகண்டன், லக்ஷய் ஜெயின், மோகன் பிரசாந்த், சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், மிதுன் லக்ஷ்மிநாராயணன் விக்னேஷ், சுகேந்திரன், என்.எஸ்.ஹரிஷ், அஸ்வின் க்ரிஸ்ட், இம்மானுவேல் செரியன், என் கபிலன், ஆதித்யா அருண்
அதிரடியாக ஆடிய பாபா அபராஜித் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 2ஆவது வெற்றி!