கொல்கத்தாவில் கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்: காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!
கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ரசிகர்கள் கோலி கோலி என்று கோஷமிட்டதால், பவுலிங் செய்து கொண்டிருந்த நவீன் உல் ஹக், காம்பீர் ஸ்டைலில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
கடைசி வரை போராடிய ரிங்கு சிங்; 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடைசி வரை போராடிய ரிங்கு சிங் இருந்தும் கேகேஆர் அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 4ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இதன் மூலமாக லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையிலான கள மோதல் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வரை சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் விராட் கோலி அவுட்டாகும் போது நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் காம்பீர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் மாம்பழத்தை பதிவிட்டு சந்தோஷத்தை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் நவீன் உல் ஹக் பந்து வீசும் போது கோலி கோலி என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அவரது 2 ஆவது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசவே, ரசிகர்கள் அவரது கோபத்தை தூண்டி விடும் வகையில் கோலி கோலி என்று கோஷமிட்டனர்.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!
யாஷ் தாக்கூர் பந்து வீசிய போது அவரது பந்தில் கேகேஆர் அணியின் குர்பாஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது கேட்சை ரவி பிஷ்னாய் தட்டி தடுமாறி கேட்ச் பிடித்தார். அப்போது அவருக்கு அருகில் நின்றிருந்த நவீன் உல் ஹக் ரசிகர்களை நோக்கி வாயில் விரலை வைத்து சைலன்ஸ் என்று கூறுவது போன்று கவுதம் காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!