ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் முதலிடம் – 2023 எடுத்துக்காட்டு!
2023 ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் 49 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டும் பிறக்கப் போகிறது. 2023ம் ஆண்டில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸ்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி, குல்தீப் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு இந்திய அணி 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா முதலிடம் – 2023 ரீவைண்ட் ஒருநாள் சீரிஸ்!
இதில், குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் விளையாடி 29 இன்னிங்ஸில் மட்டும் பந்து வீசியுள்ளார். இதில், 1306 பந்துகள் வீசி 13 மெய்டன் ஓவர்கள் உள்பட 49 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், 2 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் இந்திய அணியின் போட்டி அட்டவணை- டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்!
குல்தீப் யாதவ்வைத் தொடர்ந்து முகமது சிராஜ் 25 போட்டிகளில் 24 இன்னிங்ஸில் விளையாடி 17 மெய்டன்கள் உள்பட 44 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் 2 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் கைப்பற்றினார். முகமது ஷமி 19 போட்டிகளில் விளையாடி 12 மெய்டன்கள் உள்பட 43 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு முறை 4 விக்கெட்டும், 4 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். இதில் உலகக் கோப்பையில் மட்டும் 3 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
கேல் ரத்னா, அர்ஜூனா விருதை சாலையிலேயே விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!