கேல் ரத்னா, அர்ஜூனா விருதை சாலையிலேயே விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

டெல்லியில் பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை சாலையிலேயே விட்டு சென்றுள்ளார்.

Vinesh Phogat, the wrestler who left Khel Ratna and Arjuna Award award on Kartavya Path in New Delhi rsk

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், அவரை கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்.

கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா – 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற திவீர பயிற்சி!

இதில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த சம்மேள தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மல்யுத்த வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, 20216 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதே போன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தான் பெற்ற பத்மஸ்ரீ விருதையும் திரும்ப அளிப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். நீதி கிடைக்கும் வரையில் அதனை திரும்ப பெறப்போவதில்லை என்றும் கூறினார்.

பிளாக் அண்ட் பிளாக் லுக்கில் MSD: தோனி மடியில் அமர்ந்த சாக்‌ஷி – வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில், சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகத் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை சாலையில் விட்டு சென்றார். டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள கடமை பாதையில் மத்திய அரசு வழங்கிய தயான் சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை விட்டு சென்றார். பிரதமர் அலுவலகத்திற்கு வெளியில் விட்டுச் செல்ல முயற்சித்தார். ஆனால், போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் கடமை பாதையிலேயே விட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

3 ரன்களில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா: 2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா மகளிர் அணி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios