3 ரன்களில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா: 2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா மகளிர் அணி!
இந்தியா மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ரன்களில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பொம்ம ரயில் பயணம், சறுக்கு விளையாட்டு என்று மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ரோகித் சர்மா!
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மும்பையில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லீஸ் பெர்ரி 50 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
ISPL T10 League 2024: இந்தியாவில் அறிமுகமாகும் ISPLடி10 தொடர் – மார்ச் 2ஆம் தேதி ஆரம்பம்!
ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், யஷ்டிகா பாட்டியா 14 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிச்சா கோஷ் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 117 பந்துகளில் 13 பவுண்டரி உள்பட 96 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஜெமீமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் மட்டுமே இந்திய மகளிர் அணி எடுத்து 3 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா மகளிர் அணி கைப்பற்றியது.
South Africa vs India 2nd Test, Cape Town: ஜெரால்டு கோட்ஸி விலகல்; இந்தியா அணி ஹேப்பி அண்ணாச்சி!