பிளாக் அண்ட் பிளாக் லுக்கில் MSD: தோனி மடியில் அமர்ந்த சாக்ஷி – வைரலாகும் புகைப்படம்!
சாக்ஷியை தனது மடியில் அமர வைத்து கட்டியணைத்திருந்த தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni Dubai Vacation
இந்திய ரசிகர்கள், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தோனியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது. 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sakshi sit on Dhoni Lap
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் நடந்த ஐபிஎல் 2024 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரில் மிட்செல் ரூ.14 கோடி, சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடி, ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடி, முஷ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.2 கோடி, ரச்சின் ரவீந்திரா ரூ.1.80 கோடி மற்றும் அவனிஷ் ராவ் ஆரவெல்லி ரூ.20 லட்சம் என்று ஏலம் எடுக்கப்பட்டனர்.
MS Dhoni Dubai Vacation, Sakshi, Rishabh Pant
தற்போது சிஎஸ்கே அணியானது டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா என்று பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது தோனி துபாயில் இருந்தார்.
MS Dhoni With Nupur Sanon
அங்கு, ரிஷப் பண்ட் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் டென்னிஸ் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் தற்போது தனது மடியில் சாக்ஷியை அமர வைத்து அவரை கட்டி பிடித்திருப்பது போன்ற தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni Dubai Vacation
நாளை 2024 ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில், ஆங்கிலப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் தோனி துபாயில் சுற்றுலா சென்று வருகிறார். அவருடன் அவரது மனைவி சாக்ஷி, டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பண்ட், பாலிவுட் நடிகை க்ரீத்தி சனோன், நூபுர் சனோன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
MS Dhoni Dubai
தோனியின் கிரிக்கெட் சாதனைகள் தவிர, அவரது ஹேர்ஸ்டைலும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தோனியின் தற்போதைய ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் அதிகளவில் பின்பற்றி வருகின்றனர். தனது ஹேர்ஸ்டைல் குறித்து தோனி கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் நான் விளம்பரப் படங்களுக்குப் போனபோது 20 நிமிடத்தில் முடி, மேக்கப் எல்லாவற்றிலும் தயாராகிவிடுவது வழக்கம்.
Dhoni Dubai
இப்போது 1 மணிநேரம், 5 நிமிடங்கள் - 1 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும். அந்த நாற்காலியில் உட்கார்ந்து காத்திருப்பது சற்று சலிப்பாக இருக்கிறது, ஆனால் எனது ரசிகர்கள் அனைவரும் சிகை அலங்காரத்தால் பாராட்டப்பட்டனர். எனவே, சிறிது காலம் அதைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பேன் என்று தோனி கூறியிருக்கிறார்.