ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா முதலிடம் – 2023 ரீவைண்ட் ஒருநாள் சீரிஸ்!
2023 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
Rohit Sharma Clean Bowled
இந்திய அணியின் வெற்றியோடு தொடங்கிய 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாளை 2024ஆம் ஆண்டை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கும்.
Team India
2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்றோடு, தீய பழக்க வழக்கங்களை விட்டுவிட வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழியோடு, பிறக்க போகும் 2024 ஆம் ஆண்டு எல்லோருக்கும் நல்ல ஆண்டாக அமைய ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, இந்திய அணியில் 2023 ஆம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
Rohit Sharma
இந்திய அணி இந்த 2023ஆம் ஆண்டில் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணி என்ற சாதனையை படைத்ததோடு அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் டீம் இந்தியா படைத்துள்ளது.
Hit Man Rohit Sharma
விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதில், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
Rohit Sharma ODI Matches
இந்த 35 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதோடு, இதில், 26 இன்னிங்ஸில் மட்டுமே களமிறங்கி 67 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், 131 பவுண்டரிகளும் அடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
Rohit Sharma Sixes
இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 26 ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா 1255 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2 சதமும், 9 அரைசதமும் அடித்துள்ளார்.
Rohit Sharma Hit Most Sixes
சுப்மன் கில்:
இந்திய அணி விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதோடு 180 பவுண்டரிகள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் அதிக பவுண்டரி அடித்தவர்களின் பட்டியலில் சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 1584 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 208 ரன்கள் குவித்தார். மேலும், 5 சதமும், 9 அரைசதமும் அடித்துள்ளார்.
Rohit Sharma ODI Sixes
ஷ்ரேயாஸ் ஐயர்:
சுப்மன் கில்லைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 20 போட்டிகளில் விளையாடி 19 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 32 சிக்ஸர்களும், 67 பவுண்டரிகளும் அடித்துள்ளார். மேலும், 846 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 128* ரன்கள் அடங்கும். 3 சதமும், 4 அரைசதமும் அடித்துள்ளார்.
Rohit Sharma ODI Runs
விராட் கோலி:
ஷ்ரேயாஸ் ஐயரைத் தொடர்ந்து விராட் கோலி அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். அவர், 24 சிக்ஸர்கள், 124 பவுண்டரிகள் உள்பட 1377 ரன்கள் எடுத்துள்ளார். 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி அதில் 24 இன்னிங்ஸில் மட்டும் பேட்டிங் செய்துள்ளார்.
Rohit Sharma Most ODI Sixes
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஒரே காலண்டர் இயரில் விராட் கோலி 2000 க்கும் அதிகமாகவே ரன்கள் குவித்துள்ளார்.
Rohit Sharma
2012: 2186 ரன்கள்
2014: 2286 ரன்கள்
2016: 2595 ரன்கள்
2017: 2818 ரன்கள்
2018: 2735 ரன்கள்
2019: 2455 ரன்கள்
2023: 2048 ரன்கள்
கிரிக்கெட் வரலாற்றில் 7 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 2000க்கும் அதிகமாக ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி என்ற பெருமையை பெற்றுள்ளார்.