2024ஆம் ஆண்டின் இந்திய அணியின் போட்டி அட்டவணை- டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்!
2024 ஆம் ஆண்டு பிறக்கும் நிலையில், இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்கள் பற்றி பார்க்கலாம்.
Team India
நடப்பு 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று இந்திய அணி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. 2023 ஆம் ஆண்டை வெற்றியோடு தொடங்கிய இந்திய அணியானது டெஸ்ட் போட்டியில் தோற்று தோல்வியோடு முடித்துள்ளது.
Team India
2023 ஆம் ஆண்டில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் என்று 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Indian Cricket Team Test, ODI, T20I Schedule
மேலும், 2 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதைத் தொடர்ந்து நாளை 2024 ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணிகள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட அட்டவணை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Indian Cricket Team 2024 Schedule
இந்திய கிரிக்கெட் அணி போட்டி அட்டவணை 2024:
ஜனவரி:
ஜனவரி 03 – தென் ஆப்பிரிக்கா – இந்தியா 2ஆவது டெஸ்ட் – கேப்டவுன்
ஆப்கானிஸ்தான் வருகை:
ஜனவரி 11 – இந்தியா – ஆப்கானிஸ்தான் – முதல் டி20, மொஹாலி
ஜனவரி 14 - இந்தியா – ஆப்கானிஸ்தான் – 2ஆவது டி20, குவாலியர்
ஜனவரி 17 - இந்தியா – ஆப்கானிஸ்தான் – 3ஆவது டி20, பெங்களூரு
Team India
இங்கிலாந்து வருகை:
ஜனவரி 25 – இந்தியா – இங்கிலாந்து – முதல் டெஸ்ட், ஹைதராபாத்
பிப்ரவரி 02 - இந்தியா – இங்கிலாந்து – 2ஆவது டெஸ்ட், விசாகப்பட்டினம்
பிப்ரவரி 15- இந்தியா – இங்கிலாந்து – 3ஆவது டெஸ்ட், ராஜ்கோட்
பிப்ரவரி 23 - இந்தியா – இங்கிலாந்து – 4ஆவது டெஸ்ட், ராஞ்சி
Team India
மார்ச் 7 - இந்தியா – இங்கிலாந்து – 5ஆவது டெஸ்ட், தரம்சாலா
ஐபிஎல் 2024 : மார்ச் முதல் மே வரை
டி20 உலகக் கோப்பை: ஜூன் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில்
Team India 2024 Schedule
இந்தியா சுற்றுப்பயணம்:
ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்
வங்கதேசம் வருகை:
செப்டம்பர் முதல் அக்டோபர் வரையில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுகிறது.
Team India
நியூசிலாந்து வருகை:
அக்டோபர் – நவம்பர் வரையில் இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்துவிளையாடுகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:
நவம்பர் – டிசம்பர் (ஜனவரி 2025 தொடக்கம்) மாதங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மொத்தமாக 2024ஆம் ஆண்டில் இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.