Asianet News TamilAsianet News Tamil

AUS vs WI: 2வது இன்னிங்ஸில் பிராத்வெயிட் அபார சதம்.. வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற செய்வாரா..?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 498 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரைக் பிராத்வெயிட் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடிக்க, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்துள்ள நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 306 ரன்களும், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளூம் தேவை. 
 

kraigg brathwaite scores century in second innings of first test against australia
Author
First Published Dec 3, 2022, 11:54 PM IST

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் (200) மற்றும் மார்னஸ் லபுஷேன் (204) ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டைசதமடித்தனர். டிராவிஸ் ஹெட் 99 ரன்களை குவித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரைக் பிராத்வெயிட் (64) மற்றும் சந்தர்பால் (51) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

315 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், முதல் இன்னிங்ஸில் இரட்டைசதமடித்த லபுஷேன், 2வது இன்னிங்ஸில் சதமடித்தார். லபுஷேன் 104 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களுக்கு இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 497 ரன்கள் முன்னிலை பெற, 498 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 4ம் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்துள்ளது. கிட்டத்தட்ட வெற்றிக்கு சாத்தியமில்லாத இலக்கை விரட்டிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சந்தர்பால் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ப்ரூக்ஸ் (11) மற்றும் பிளாக்வுட் (24) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிவரும் தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் சதமடித்தார். அவர் ஆஸ்திரேலிய பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு அபாரமாக ஆடிவருகிறார்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா போய்ட்டு போகுது.. அதுக்கு என்ன பண்றது? ஆசிய கோப்பை குறித்து ரமீஸ் ராஜா தடாலடி

பிராத்வெயிட் 101 ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 306 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 7 விக்கெட் தேவை. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால் களத்தில் நிலைத்து சதமடித்த பிராத்வெயிட், வெஸ்ட் இண்டீஸுக்கு இந்த போட்டியில் இழக்க எதுவுமில்லை என்பதால் பெறுவதற்கு வெற்றி இருக்கிறது என்பதை மனதில் வைத்து ஆடினால் ஆஸ்திரேலியாவிற்கு சவாலளிக்கலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios