Asia Cup 2023: டெஸ்ட்டுக்கு தயாரான கேஎல் ராகுல்; ஆசிய கோப்பையில் இடம் பெறுவாரா?
இந்த மாதம் இறுதியில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேஎல் ராகுலுக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடர்களைத் தொடர்ந்து மிக முக்கியமான தொடர்களான ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்திய அணியும் இதற்காகவே தயாராகி வருகிறது. ஆனால், மிடில் ஆர்டர் பலமாக இருந்தால், தொடக்க வீரர்கள் சொதப்பி விடுகின்றனர். ஓபனிங் நன்றாக இருந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிடுகின்றனர். இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
அவர்களுக்குப் பதிலாக இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், திலக் வர்மா என்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எனினும், அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாத நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இத்தனை கோடியா? விளக்கம் கொடுத்த விராட் கோலி!
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மூலமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கேஎல் ராகுலுக்கு ஃபிட்னெஸ் டெஸ்ட் செய்யப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18 ஆம் தேதி கேஎல் ராகுலுக்கு பிட்னஸ் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதில், கேஎல் ராகுல் தனது முழு உடல் பரிசோதனையில் தோல்வி அடைந்தால் இந்திய அணி மாற்று வீரரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை பயிற்சியாளர் லட்சுமணன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற மலேசியா – தொடர்ந்து 5 முறை 3ஆவது இடம்!