IPL 2023: கேஎல் ராகுல் பொறுப்பான அரைசதம்.. மற்ற அனைவருமே சொதப்பல்..! PBKS-க்கு எளிய இலக்கை நிர்ணயித்த LSG

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து 160 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 
 

kl rahul half century but lsg set easy target to pbks in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று லக்னோவில் நடந்துவரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் இறங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆடாததால் சாம் கரன் கேப்டன்சி செய்கிறார். தவானுக்கு பதிலாக அதர்வா டைட் தொடக்க வீரராக ஆடுகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராஸா, சாம் கரன் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, ரரகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

IPL 2023:எவ்வளவு எளிய இலக்கு கொடுத்தாலும் அடிக்கமாட்டோம்! அடம்பிடித்து 5வது போட்டியிலும் தோற்ற DC.! RCB வெற்றி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், யுத்வி சிங் சராக், மார்க் உட், ரவி பிஷ்னோய்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 23 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா(2), க்ருணல் பாண்டியா(18), பூரன்(0), ஸ்டோய்னிஸ்(15) ஆகிய மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்து பேட்டிங்கில் சொதப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கேப்டனும் தொடக்க வீரருமான கேஎல் ராகுல் 19வது ஓவரில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி..! வார்னர் முதலிடம்

ராகுலை தவிர அனைவருமே சொதப்பியதால் 20 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே அடித்த லக்னோ அணி, 160 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios