KL Rahul: காட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மனைவியுடன் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், கேஎல் ராகுல் தனது மனைவியுடன் காட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலுக்கு வலது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகினார். அதன் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அவர், தனது உடல் தகுதியை நிரூபித்த நிலையில், ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் யோ யோ பரிசோதனை செய்தனர். பயிற்சி போட்டியிலும் விளையாடினர். ஆனால், கேஎல் ராகுல் யோ யோ டெஸ்ட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் முழு உடல் தகுதியை எட்டாத நிலையில், பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இடம் பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
Asia Cup 2023: மழை இந்தியாவிற்கு சாதகமா? பாதகமா? மழையால் மீண்டும் போட்டி நிறுத்தம்!
ஆதலால், இலங்கை வந்த இந்திய அணியுடன் கேஎல் ராகுல் வரவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி தற்போது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கேஎல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியுடன் இணைந்து கர்நாடகாவில் உள்ள காட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India vs Pakistan: வெளியே, உள்ளே போட்டு ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி!