IPL 2023: லிட்டன் தாஸுக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸ் வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்..! செம சாய்ஸ்
ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸை அறிவித்தது கேகேஆர் அணி.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்றில் பாதி சீசனை கடந்துவிட்ட நிலையில், இந்த சீசன் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் அதிகமான வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவந்தன.
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மேலேறிவருவதால் சீசன் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. இந்த 6 அணிகளில் எந்த 4 அணிகள் வேண்டுமானாலும் பிளே ஆஃபிற்கு முன்னேறும். பஞ்சாப் கிங்ஸும் இந்த போட்டியில் உள்ளது.
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்
டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டன. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு மாற்று வீரரை அறிவித்துள்ளது கேகேஆர் அணி.
ரூ.50 லட்சத்திற்கு வங்கதேச விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை அணியில் எடுத்தது கேகேஆர் அணி. தனது தேசிய அணிக்கான பங்களிப்பை செய்துவிட்டு பாதி சீசனில் வந்து கேகேஆர் அணியுடன் இணைந்த லிட்டன் தாஸ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் ஆடும் லெவனில் இடம்கிடைக்காத லிட்டன் தாஸ், தனது குடும்பத்தில் மருத்துவ அவசர காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து லிட்டன் தாஸ் விலகினார்.
இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. ஜான்சன் சார்லஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 41 போட்டிகளில் ஆடி 971 ரன்கள் அடித்துள்ளார். 2012 மற்றும் 2016 டி20 உலக கோப்பைகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் இடம்பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 224 டி20 போட்டிகளில் ஆடி 5600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ஜான்சன் சார்லஸ். பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிய அனுபவம் கொண்டவர் ஜான்சன் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.