IPL 2023: சாஹலின் சுழலில் சுருண்டது கேகேஆர்! வெங்கடேஷ் ஐயர் அரைசதம்; ஆனாலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எளிய இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்து, 150 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டி ஆகும். 11 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் புள்லி பட்டியலில் 5 மற்றும் 6ம் இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் வெற்றி கட்டாயத்துடன் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
IPL 2023: விராட் கோலியா ரோஹித் சர்மாவா..? தீபக் சாஹரி நச் பதில்
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக தொடங்கினர் .ஆனால் ஜேசன் ராய்(10) மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ்(18) ஆகிய இருவரையும் டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார்.
அதன்பின்னர் நிதிஷ் ராணாவை 22 ரன்களூக்கு சாஹல் வீழ்த்த, ஆண்ட்ரே ரர்சலை 10 ரன்களுக்கு கேஎம் ஆசிஃப் வீழ்த்தினார். ரிங்கு சிங்(16), ஷர்துல் தாகூர்(1) ஆகியோரையும் சாஹல் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயரை57 ரன்களுக்கு சாஹல் வீழ்த்தினார். வெங்கடேஷ் ஐயரை தவிர யாருமே சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஒவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்தது கேகேஆர் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். 150 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டிவருகிறது.