IPL 2023: விராட் கோலியா ரோஹித் சர்மாவா..? தீபக் சாஹரி நச் பதில்
விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகிய இருவரில் யாருடைய விக்கெட் ஃபேவரைட் விக்கெட் என்ற கேள்விக்கு தீபக் சாஹர் பதிலளித்துள்ளார்.
ஒவ்வொரு பவுலருக்கும் சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது பெரிய கனவாகவே இருக்கும். அதிலும் இளம் பவுலர்களுக்குத்தான் அந்த ஆர்வமும் வேகமும் அதிகம் இருக்கும். சீனியர் பவுலர்களுக்குமே தங்களுக்கான கனவு விக்கெட் என்று சில இருக்கும்.
ஒரு காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுகள், அதன்பின்னர் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா ஆகியோர் பல பவுலர்களின் கனவு விக்கெட்டுக்கான வீரர்களாக இருந்தனர்.
சமகாலத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். அந்தவகையில், இதுகுறித்த கேள்விக்கு மழுப்பாமல் பதிலளித்துள்ளார் தீபக் சாஹர்.
சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டிக்கு பின் தீபக் சாஹரிடம், ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரில் உங்களது ஃபேவரைட் விக்கெட் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபக் சாஹர், ரோஹித் சர்மாவை பலமுறை வீழ்த்தியிருக்கிறேன். எனவே கண்டிப்பாக விராட் கோலி தான் என்று பதிலளித்தார் தீபக் சாஹர்.
IPL 2023: அந்த பையன் செம டேலண்ட்.. கூடிய சீக்கிரம் இந்திய அணியில் ஆடுவார்..! ஹர்பஜன் சிங் நம்பிக்கை
விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். விராட் கோலி 75 சர்வதேச சதங்களுடன், சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார் என்றால், ஒருநாள் 3 இரட்டை சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற இனிமேல் முறியடிக்கமுடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.