Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: அந்த பையன் செம டேலண்ட்.. கூடிய சீக்கிரம் இந்திய அணியில் ஆடுவார்..! ஹர்பஜன் சிங் நம்பிக்கை

ஐபிஎல் 16வது சீசனில் ரிங்கு சிங் அபாரமாக ஆடி கேகேஆர் அணிக்காக ஃபினிஷிங் ரோலை மிகச்சிறப்பாக செய்துவரும் நிலையில், அவர் விரைவில் இந்திய அணியில் ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

harbhajan singh opines rinku singh will play for india soon amid ipl 2023
Author
First Published May 11, 2023, 3:39 PM IST

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

IPL 2023: முக்கியமான போட்டியில் கேகேஆர் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

குறிப்பாக ரிங்கு சிங் கேகேஆர் அணிக்காக டெத் ஓவர்களில் கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட்டுகளை ஆடி அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட, கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத அந்த இலக்கை கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை முடித்து கொடுத்து அசத்திய ரிங்கு சிங், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார் ரிங்கு சிங்.

இன்று முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கேகேஆர் அணிகள் மோதவுள்ள நிலையில், கேகேஆர் வீரர் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார். அவர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத்தான் முழு கிரெடிட். இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios