IPL 2023: ராயுடுவா துபேவா..? அய்யோ பாவம் தல தோனியே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.. தோனியை ட்ரோல் செய்த சிஎஸ்கே

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸின்போது அணி காம்பினேஷனில் தவறு செய்த கேப்டன் தோனி, சிஎஸ்கே அணி டுவிட்டரில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.
 

csk trolls captain ms dhoni for the blunderhe did during csk vs dc match toss in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன.

எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லியை தவிர மற்ற 6 அணிகளுக்கும் வாய்ப்பிருப்பதால் அனைத்து அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறும் முனைப்பில் இருப்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியம் ஆகும்.

IPL 2023: அந்த பையன் செம டேலண்ட்.. கூடிய சீக்கிரம் இந்திய அணியில் ஆடுவார்..! ஹர்பஜன் சிங் நம்பிக்கை

இதுவரை 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது அவரது கடைசி சீசன் இல்லை என்று தகவல் வெளியாகிவருகிறது. எனவே பெரும்பாலும் இது தோனியின் கடைசி சீசனாக இருக்க வாய்ப்பில்லை.

சிறப்பாக ஆடிவரும் சிஎஸ்கே அணி இந்த சீசனில் 5வது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. டாஸ் போடும்போது அணி காம்பினேஷன் குறித்து பேசும்போது தவறாக சொல்வதையோ அல்லது காம்பினேஷன் - மாற்றங்களை மறந்து நிற்பதையோ பலமுறை பார்த்திருக்கிறோம். 

நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த கேப்டனான தோனியும் அதற்கு விதிவிலக்கல்ல. சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது, அணி காம்பினேஷன் குறித்து பேசிய தோனி, ஷிவம் துபேவுக்கு பதில் ராயுடு ஆடுவதாக தெரிவித்தார். ஆனால் இந்த சீசனில் மிகச்சிறப்பான ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ஷிவம் துபே தான் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தார். தோனி தவறுதலாக துபேவுக்கு பதிலாக ராயுடு ஆடுவதாக தெரிவித்துவிட்டார்.

IPL 2023: முக்கியமான போட்டியில் கேகேஆர் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இதையடுத்து தோனியை கலாய்க்கும் விதமாக, பயிற்சியின்போது தோனி ஷிவம் துபேவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, பயிற்சியின்போது துபேவை வைத்திருந்ததாகவும், டாஸின் போது அவரை தோனி கழட்டிவிட்டார் என்று சுட்டிக்காட்டும்விதமாக அதே புகைப்படத்தில் துபேவை நீக்கிவிட்டு டுவிட்டரில் தோனியை ட்ரோல் செய்துள்ளது சிஎஸ்கே.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios