Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: தோனி, ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டுயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

KKR Player Rinku Singh Breaks MS Dhoni, Rohit Sharma Previous IPL records against Gujarat Titans in Ahmedabad
Author
First Published Apr 10, 2023, 11:33 AM IST | Last Updated Apr 10, 2023, 11:33 AM IST

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 29 ரன்களும், தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக வந்த விஜய் சங்கர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் 25ஆவது பெண் கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சவிதா ஸ்ரீ!

இறுதியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 45 பந்துகளில் வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரூ ரஸல் (1), சுனில நரைன் (0), ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அடுத்தடுத்து ரஷீத் கானின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகினர். ஹாட்ரிக் முறையில் இவர்களது விக்கெட்டை கைப்பற்றி ஐபிஎல் 2023 தொடரில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாத்னை படைத்தார்.

IPL 2023: காரை பின் தொடர்ந்து சென்ற மாற்றுத்திறனாளி: வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டிய ப்ரீத்தி ஜிந்தா!

கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் தனி ஒருவராக போராடி அணிக்கு தேடிக் கொடுத்தார். ஜோஸ்வா வீசிய 19ஆவது ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்து வீசினார். உமேஷ் யாதவ் 1 ரன் எடுத்தார். அதன் பிறகு 5 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்க விட்டு ஒரே போட்டியில் ரிங்கு சிங் ஹீரோவானார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IPL 2023: விராட் கோலியின் 2000 ரன்கள் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

இந்த வெற்றியின் மூலமாக, 

கடைசி ஓவரில் அதிக ரனகள் 29  எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்துள்ளது.
20ஆவது ஓவரில் 30 ரன்கள் அடித்ததன் மூலமாக உலக டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார். கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

  1. ரிங்கு சிங் - 30 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
  2. எம் எஸ் தோனி - 24 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  3. நிக்கோலஸ் பூரன் - 23 (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  4. ரோகித் சர்மா - 22 (டெக்கான் சார்ஜஸ்)
  5. எம் எஸ் தோனி - 22 (பஞ்சாப்)

உலக டெஷ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை; வாய்ப்பை தட்டி செல்லும் ரஹானே?

ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

கிறிஸ் கெயில் - ராகுல் சர்மா ஒவர் - 2012
ராகுல் திவேதியா - ஷெல்டான் காட்ரெல் ஒவர் - 2020
ரவீந்திர ஜடேஜா - ஹர்ஷல் படேல் ஓவர் - 2021
மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் -  ஷிவம் மவி ஓவர் - 2022
ரிங்கு சிங் - யாஷ் தயாள்  ஓவர்- 2023

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios