உலக டெஷ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை; வாய்ப்பை தட்டி செல்லும் ரஹானே?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடக்க உள்ள நிலையில், அதில் அஜிங்க்யா ரஹானே இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

World Test Championship final: Suryakumar Yadav out of form; Rahane who knocks the chance?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெற்றி விகிதங்களின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 2வது அணியாக முன்னேறும் வாய்ப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுக்குமே இருந்தது.

IPL 2023: சென்னைக்கு தாயும், தகப்பனுமா தோனி இருக்கும் போது எவனால் ஜெயிக்க முடியும்: ஹர்பஜன் சிங்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

IPL 2023: எல்லாத்துக்கு சுதந்திரம் கொடுத்திருக்காரு; டாஸுக்கு முன்னாடி தான் எனக்கே தெரியும்: ரஹானே!

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோர் விலகிய நிலையில் சூர்யகுமார் யாதவ்வும் ஃபார்மில் இல்லை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போதும் கூட அதே ஃபார்மில் தான் இருக்கிறார். ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில் 15 ரன்கள் எடுத்தார். 2ஆவது போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், தான் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்க்யா ரஹானே சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்தார். அது மட்டுமின்றி, மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவிற்காக எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. இங்கு, இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசை இருக்கிறது என்று கூறியிருந்தார்.

IPL 2023: இஷான் கிஷானின் கேர்ல் ஃப்ரண்ட் யாருன்னு தெரியுமா?

இந்த நிலையில், தான் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஜிங்க்யா ரஹானே இடம் பெறும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதுவரையில் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 4931 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 முறை சதமும், 25 முறை அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios