IPL 2023: விராட் கோலியின் 2000 ரன்கள் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இளம் வீரராக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
சுப்மன் கில்
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனுக்காக ஐபிஎல் 2023 திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் இதுவரையில் வெற்றி பெறவில்லை.
சுப்மன் கில்
மற்ற அணிகள் ஒரு போட்டி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று பரபரப்பாக விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13 ஆவது போட்டி நடந்து வருகிறது.
சுப்மன் கில்
இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரஷீத் கான் பேட்டிங் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் இடம் பெற்றார்.
சுப்மன் கில்
அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். சகா 17 ரன்களில் வெளியேறினார். சுப்மன் கில் 39 பந்துகளில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்
அவர், 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இளம் வயதில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரையில் 76 போட்டிகளில் விளையாடி 1977 ரன்கள் எடுத்திருந்தார்.
சுப்மன் கில்
அதில், 15 அரை சதங்கள் அடங்கும். ஆனால், இன்னும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் 197 பவுண்டரிகளும், 50 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
சுப்மன் கில்
கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் ரூ.180 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சுப்மன் கில்லை கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போதும் அதே தொகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லை தக்க வைத்துள்ளது.
சுப்மன் கில்
இந்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் 23 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2000 ரன்களை கடந்து விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
சுப்மன் கில்
அதாவது, விராட் கோலி 24 வயது 175 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்துள்ளார். ஆனால், சுப்மன் கில் 23 வயது 214 நாட்களில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட் (23 வயது, 27 நாட்கள்), சஞ்சு சாம்சன் (24 வயது, 140 நாட்கள்), சுரேஷ் ரெய்னா (25 வயது, 155 நாட்கள்) ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில்
அதுமட்டுமின்றி 9ஆவது இந்திய வீரராக 74 போட்டிகளில் 2000 ரன்களை சுப்மன் கில் கடந்துள்ளார்.
இதற்கு முன்னதாக
கேஎல் ராகுல் - 60 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 63 இன்னிங்ஸ்
ரிஷப் பண்ட் - 64 இன்னிங்ஸ்
கவுதம் காம்பீர் - 68 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா - 69 இன்னிங்ஸ்
விரேந்திர சேவாக் - 70 இன்னிங்ஸ்
அஜிங்க்யா ரஹானே - 71 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் - 74 இன்னிங்ஸ்
சுப்மன் கில் - 74 இன்னிங்ஸ்