IPL 2023: காரை பின் தொடர்ந்து சென்ற மாற்றுத்திறனாளி: வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டிய ப்ரீத்தி ஜிந்தா!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா காரை மாற்றுத்திறனாளி ஒருவர் பின் தொடர்ந்து சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இடம் பெற்று விளையாடி வருகிறது. இதுவரையில் 2 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான 14 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா, தனக்கும், தனது மகளுக்கும் இருவிதமான சம்பவங்கள் நடந்துள்ளது. அது என்னவென்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
IPL 2023: விராட் கோலியின் 2000 ரன்கள் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
எனது மகள் கார்டன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு உயரடுக்கு கட்டிடத்தில் வசிக்கும் பெண்மணி, போட்டோ எடுக்க முயன்றார். ஆனால், வேண்டாம் என்று நாங்கள் பணிவாக கேட்ட போது, திடீரென்று அந்தப் பெண்மணி எனது மகள் ஜியாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து, என்ன ஒரு அழகான குழந்தை என்று கூறிவிட்டு ஓடி சென்றாள். இதுவே நான் பிரபலமாக இல்லாவிட்டால், நான் மோசமாக நடந்து கொண்டிருப்பேன். ஆனால், அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருந்தேன்.
ஒரு பொது இடத்தில் மாற்றுத்திறனாளியைக் கண்ட ப்ரீத்தி ஜிந்தா, அவருக்கு கையசைத்து காட்டிவிட்டு காரில் ஏறி செல்ல முயன்றார். ஆனால், அவர் காசு ஏதும் கொடுக்கவில்லை என்பதற்காக அந்த மாற்றுத்திறனாளியோ, தனது சக்கர நாற்காலியில் காரை பின் தொடர்ந்து சென்று காசு கேட்டதாக வீடியோவை வெளியிட்டு தன்னையும், தனது குழந்தையையும் பொதுமக்கள் எந்தளவிற்கு தொந்தரவு செய்கின்றனர் என்று பாருங்கள் என கூறியுள்ளார்.
IPL 2023: சென்னைக்கு தாயும், தகப்பனுமா தோனி இருக்கும் போது எவனால் ஜெயிக்க முடியும்: ஹர்பஜன் சிங்!
ஆனால், இப்படியொரு விஷயத்தை ப்ரீத்தி ஜிந்தா வெளிப்படையாக பேசி விட்டதாக கூறி ஹிருத்திக் ரோஷன், மலைகா அரோரா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னும், சிலர் காசு கொடுத்திருந்தால், அந்த மாற்றுத்திறனாளி உங்களை தொந்தரவு செய்திருக்க மாட்டார். உங்களது காரையும் பின் தொடர்ந்து வந்திருக்க மாட்டார் என்று கூறி அவரது செயலை விமர்சித்து வருகின்றனர். ஒரு மாற்றுத்திறனாளியை இப்படி வீடியோ எடுத்து போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி ப்ரீத்தி ஜிந்தாவை விமர்சித்து வருகின்றனர்.