IPL 2023: ஓ இது கொல்கத்தா பிட்ச்சா? அப்போ ஹைதராபாத்திற்கு தான் வாய்ப்பு! ரிங்குவின் அதிரடி வேட்டை தொடருமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

KKR and SRH Probable Playing XI for today 19th Match in IPL 2023

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் 15ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கொல்கத்தா மைதானத்தில் நடந்த போட்டிகளில் ஹைதராபாத்திற்கு எதிரான 6ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் கொல்கத்தாவிற்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

IPL 2023: ஒரு கேப்டனாக நீங்கள் அப்படி செய்திருக்க கூடாது; ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

இதுவரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதே போன்று பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்று நடக்கும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ராசியான மைதானமாகும். இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி கண்டுள்ளது.

IPL 2023: இவரு கண்டிப்பா இந்தியாவுக்காக விளையாடுவாரு - இளம் வீரரை பாராட்டி பேசிய ரவி சாஸ்திரி!

இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணியில் மாயங்க் அகர்வால், அப்துல் சமாத், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடி வருகின்றனர். இதே போன்று பந்து வீச்சில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் மாயங்க் மார்கண்டே, ஃபஸால்ஹாக் பரூக்கி, டி நடராஜன் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் சவாலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடுமையாக போராட வேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: அடிமேல் அடி வாங்கும் சிஎஸ்கே; தோனியின் முழங்கால் காயம் குறித்து சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச ஆடும் 11:

ஜேசன் ராய், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரூ ரஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், லாக்கி ஃப்ர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம்; ரசிகர்களுக்கு பஞ்சாப் ஜெர்சியை வீசி எறிந்த ப்ரீத்தி ஜிந்தா; வைரலாகும் வீடியோ!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச ஆடும் 11:

மாயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், மாயங்க் மார்கண்டே, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios