IPL 2023: ரசிகர்களுக்கு பஞ்சாப் ஜெர்சியை வீசி எறிந்த ப்ரீத்தி ஜிந்தா; வைரலாகும் வீடியோ!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியை உரிமையாளர் ப்ரித்தி ஜிந்தா வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Preity Zinda throws Punjab Kings jersey to fans in PBKS vs GT 18th Match

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது. இதில், நேற்று நடந்த 18ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிராம்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். இதே போன்று கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

IPL 2023: 5 கோடியிலிருந்து 50 லட்சத்திற்கு வந்த மோகித் சர்மா: முதல் முறையாக ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்!

அதன்பிறகு வந்த மேத்யூ ஷார்ட் மட்டும் நிதானமாக ஆடி 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த பின் வரிசை வீரர்கள் ஜித்தேஷ் ஷர்மா 25 ரன்னும், சாம் கரண் 22 ரன்னும், ஷாருக்கான் 22 ரன்னும், ராஜபக்சே 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்து வீச்சைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மொகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் கைப்பற்றிய ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரண் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமான விக்கெட்டுகள். முகமது ஷமி, அல்ஜாரி ஜோசஃப், ரஷீத் கான், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

IPL 2023: எங்களை மகிழ்விக்க சிஎஸ்கே தவறுவதில்லை; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிந்து மாதவி!

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சகா 30 ரன்னில் ரபாடா ஓவரில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அதிரடியா ஆடி 67 ரன்கள் சேர்த்து சாம் கரண் பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 19 ரன்களில் வெளியேறினார். கடையாக டேவிட் மில்லர், ராகுல் திவேதியா ஆகியோர் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக 19.5 ஆவது ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

இந்த வெற்றியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி  4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியை ரசிகர்களுக்கு வீசி எறிந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios