IPL 2023: அடிமேல் அடி வாங்கும் சிஎஸ்கே; தோனியின் முழங்கால் காயம் குறித்து சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்!
தோனியின் முழங்கால் காயம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
எம் எஸ் தோனி
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் நன்றாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எம் எஸ் தோனி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கல் அடித்தது.
எம் எஸ் தோனி
176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனது 200வது ஐபிஎல் போட்டியான இந்த போட்டியில் 17 பந்தில் 32 ரன்களை விளாசினார் தோனி.
எம் எஸ் தோனி
ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஜேமிசன், முகேஷ் சவுத்ரி ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இதையடுத்து சிமர்ஜித் சிங் காயம் காரணமாக களமிறங்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜேமிசனுக்குப் பதிலாக வந்த மகாளா காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். தீபக் சகார் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்கு சென்றுள்ளார். அதே போன்று ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.
எம் எஸ் தோனி
இப்படி ஒவ்வொரு வீரராக காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கூட முழுங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக வரும் 17 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் சென்னை சூப்பர் கிஙஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
எம் எஸ் தோனி
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், அவர் அடுத்த போட்டியில் களமிறங்காமல் ஓய்வு எடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆதலால், ரசிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் இன்னும் 2 வாரங்களில் குணமடைந்துவிடுவார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் கூட மே முதல் வாரத்தில் குணமடைந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.