இந்திய வீரர்கள் என்ன ஏலியன்களா? மற்ற அணிகள்லாம் வரும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பிரச்னை? ஜுனைத் விளாசல்

ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய அணியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஜுனைத் கான்.
 

junaid khan slams india for refusing to come to pakistan to play asia cup 2023

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இல்லாததால் இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. இந்தியாவிற்கு வந்து ஆடவும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆடவும் பாகிஸ்தான் விரும்புகிறது.

ஆனால் இந்திய அரசு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆனால் அதிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை. 

இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதால் ஆசிய கோப்பை பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூற, அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக அதிருப்தியையும் விமர்சனங்களை வெளிப்படுத்திவருகிறது. 

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் நிலையில், மற்ற அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பிரச்னை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதால் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் பரிந்துரையை கொடுத்தது. ஆனால் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களை அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டதால் இன்னும் இடியாப்ப சிக்கலாகிவிட்டது இந்த பிரச்னை.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வரமறுக்கும் இந்திய அணியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஜுனைத் கான். இதுகுறித்து பேசிய ஜுனைத் கான், பாகிஸ்தான் சூழல் நன்றாகவே இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் எல்லம் பாகிஸ்தானுக்கு வரும்போது, இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை..? இந்தியாவிற்கு மட்டும் என்னதான் பிரச்னை..? அதற்கு என்ன காரணம்.? அவர்கள் (இந்திய வீரர்கள்) என்ன வேறு உலகில் இருந்து வந்த ஏலியன்களா.? பாதுகாப்பு பிரச்னை என்று சொல்கிறார்கள் என்று மிகக்கடுமையாக விமர்சித்தார் ஜுனைத் கான்.

IPL 2023: ராயுடுவா துபேவா..? அய்யோ பாவம் தல தோனியே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.. தோனியை ட்ரோல் செய்த சிஎஸ்கே

மேலும், இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட்டே இல்லை. பாகிஸ்தான் அணி சிறிய அணி கிடையாது. பாகிஸ்தான் நம்பர் 1 அணி. எப்போதுமே டாப் 3 அணிகளில் ஒன்று என்று ஜுனைத் கான் தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios