இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்

இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

jos buttler appointed as england white ball new captain after eoin morgan retirement

இயன் மோர்கன்:

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 2015 உலக கோப்பை தோல்விக்கு பின், வலுவான இங்கிலாந்து அணியை கட்டமைத்து 2019ல் ஒருநாள் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் இயன் மோர்கன். இங்கிலாந்து அணியை வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிநடை போடவைத்தவர் இயன் மோர்கன். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

மோர்கனின் மோசமான ஃபார்ம்:

சர்வதேச கிரிக்கெட்டில் 248 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7701 ரன்களையும்,  115 டி20 போட்டிகளில் ஆடி 2458 ரன்களையும் குவித்த இயன் மோர்கன், கடந்த ஒன்றரை ஆண்டாக ஃபிட்னெஸ் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த நிலையில், அண்மையில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து சாதனையை செய்தபோதிலும், அந்த போட்டியிலும், அதற்கடுத்த போட்டியிலும் என 2 அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார் மோர்கன்.

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஆடல.. பும்ரா கேப்டனாக அறிவிப்பு..! மிகப்பெரிய கௌரவம் என பும்ரா பெருமிதம்

மோர்கன் ஓய்வு:

தனது மோசமான ஃபார்ம் மற்றும் தன்னால் அணிக்கு பயனில்லை என்பதை உணர்ந்த இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமனம்:

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

சமகால கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளின் தலைசிறந்த மற்றும் அபாயகரமான வீரராக திகழ்ந்துவரும் ஜோஸ் பட்லர், 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4120 ரனக்ளையும், 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2140 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios