Asianet News TamilAsianet News Tamil

பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் காட்டடி தொடக்கம்.. மிடில் ஆர்டர் சொதப்பல்!ஆனாலும் ஆஸிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இங்கி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி  20 ஓவரில் 208 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 209 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

jos buttler  and alex hales half centuries help england to set tough target to australia in first t20
Author
First Published Oct 9, 2022, 3:51 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா,  ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. 

டி20 உலக கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள், டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக டி20 தொடரில் ஆடும் நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது.

பாகிஸ்தான் மண்ணில் டி20 தொடரை 4-3 என வென்ற இங்கிலாந்து அணி, அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு ஆடிவருகிறது. 

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், நேதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்வெப்சன்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முழு ஃபிட்னெஸுடன் இந்த தொடரில் ஆடுகிறார்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, மார்க் உட்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருமே அரைசதம் அடித்து, அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவரில் 132 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பட்லர் 32 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஒருமுனையில் பென் ஸ்டோக்ஸ்(9), ஹாரி ப்ரூக்(12), மொயின் அலி (10), சாம் கரன்(2) என மிடில் ஆர்டர் வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, மறுமுனையில் அடித்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்தில் 84 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸும் அமைத்து கொடுத்த தொடக்கத்திற்கு 230 ரன்களுக்கு மேலாவது இங்கிலாந்து அணி அடித்திருக்கவேண்டும். ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் 208 ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி. ஆனால் இதுவே பெரிய ஸ்கோர் என்பதால், 209 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios