Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

ஐபிஎல்லில் ஆடுவது அழுத்தமாக இருந்தால் ஐபிஎல்லில் ஆடாதீர்கள் என்று கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
 

kapil dev advice players to not play in ipl
Author
First Published Oct 9, 2022, 2:38 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறி ஏமாற்றமளித்த இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை வென்றே தீரும் தீவிரத்தில் உள்ளது.

இந்நிலையில், பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக இருந்த தீபக் சாஹரும் காயமடைந்தார்.

இதையும் படிங்க - IND vs SA: 2வது ODI டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இளம் ஆல்ரவுண்டர் அறிமுகம்

இப்படியாக முக்கியமான மற்றும் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் ஆடமுடியாமல் சீனியர் மற்றும் முக்கியமான வீரர்கள் விலகுவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. 

3 விதமான ஃபார்மட்டிலும் தொடர்ச்சியாக ஆடிவரும் வீரர்களுக்கு, குறிப்பாக ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு போதுமான ஓய்வளிக்கப்படுகிறது. அதை மீறியும் அவர்கள் காயமடைந்து, முக்கியமான தொடர்களில் இந்தியாவிற்காக ஆடமுடியாமல் போகிறது. அதற்கு, அவர்கள் ஐபிஎல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து 2 மாத காலம் முழுவதுமாக ஆடுவதுதான் காரணம் என்ற விமர்சனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவருகிறது.

இந்திய அணிக்காக ஆடும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளும் வீரர்கள், ஐபிஎல்லில் மட்டும் ஓய்வே எடுக்காமல் இரண்டு-இரண்டரை மாதங்கள், காசுக்காக தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுகின்றனர். ஐபிஎல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடுவதால் தான், சில வீரர்கள் அடிக்கடி காயமடைந்து முக்கியமான தொடர்களில் இந்தியாவிற்காக ஆடமுடியாமல் போகிறது.

டி20 உலக கோப்பையில் பும்ரா, ஜடேஜா ஆகிய 2 மிகப்பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இப்போதும் ஐபிஎல் குறித்த விவாதம் எழுந்துள்ளது. அதில் உண்மையும் இருக்கிறது.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், ஐபிஎல்லில் ஆடுவது வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது என்று டிவியில் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. அப்படி அது அழுத்தமாக இருக்கிறது என்றால், ஆடாதீர்கள் என்பதுதான் எனது அறிவுரை. ஒரு கிரிக்கெட் வீரருக்கு வேட்கையும் அதீத ஆர்வமும் இருந்தால், கண்டிப்பாக அது அழுத்தமாக இருக்காது. Depression(மனச்சோர்வு/மன அழுத்தம்) என்ற அமெரிக்க வார்த்தையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நான் ஒரு முன்னாள் கிரிக்கெட்டர். விளையாடுவதே சந்தோஷத்திற்காகத்தான். அப்படியிருக்கையில், மகிழ்ந்து ஆடும்போது அதில் அழுத்தத்திற்கு எங்கே இருக்கிறது இடம் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios