இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரிஷப் பண்ட் (146) மற்றும் ஜடேஜாவின்(104) சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரின் விக்கெட்டையும் இழந்தது. இருவருமே ஒற்றை இலக்கத்தில் பும்ராவின் பந்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பும் 10 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

ஜோ ரூட்(31), ஜாக் லீச்சும்(0) ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 3ம் நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்திருந்தாலும், பேர்ஸ்டோ அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

2ம் நாள் ஆட்டத்தில் பேர்ஸ்டோ ஷமியின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார். அவர் விக்கெட்டை இழக்கவில்லை என்றாலும், ஷமியின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறினார். இதையடுத்து கோலி பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேர்ஸ்டோ சிறப்பாக பேட்டிங் ஆடியிருந்தாலும், டிம் சௌதியின் பவுலிங்கில் திணறினார். எனவே டிம் சௌதி, டிம் சௌதி என கூறி பேர்ஸ்டோவை கிண்டலடித்தார் கோலி. கோலி ஸ்லெட்ஜிங் செய்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்தது.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

2ம் நாள் ஆட்டத்தில் திணறிய பேர்ஸ்டோ, 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் அடி வெளுத்து வாங்கினார். அதிரடியாக பேட்டிங் ஆடி, பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து சதமடித்தார். 140 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 106 ரன்களை குவித்தார். இந்திய பவுலர்களை எதிர்கொள்ள திணறிய பேர்ஸ்டோ, கோலி கிண்டலடித்ததால் வைராக்கியத்துடன் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அந்தவகையில், பேர்ஸ்டோவை கோலி உசுப்பேற்றிவிட்டதுதான் அவர் சதமடிக்க காரணமாக அமைந்தது.