Asianet News TamilAsianet News Tamil

ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் ஜடேஜாவின் பேட்டிங்கிலிருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
 

sanjay manjrekar opines virat kohli to learn how to leave balls from ravindra jadeja
Author
Edgbaston, First Published Jul 3, 2022, 5:12 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த சுமார் 3 ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள கோலி கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதம் தான் அவரது கடைசி சதம். அதன்பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

இந்திய அணி ஆடும் ஒவ்வொரு தொடரிலும் விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கோலி தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டிலும் வழக்கம்போலவே கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெறும் 11 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இதையும் படிங்க - ENG vs IND: ஐபிஎல் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்வி.. நறுக்குனு பதிலளித்த ஜடேஜா

அதேவேளையில், அந்த போட்டியில் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். இருவருமே சதமடித்தனர். ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

ஆண்டர்சன், பிராட் ஆகிய அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை இங்கிலாந்து கண்டிஷனில் திறம்பட எதிர்கொண்டு பேட்டிங் ஆடினார் ஜடேஜா. இந்நிலையில், இந்தபோட்டியில் ஜடேஜா ஆடிய பேட்டிங்கை பார்த்து கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: 8 வருஷத்துக்கு முன்பே என் திறமையை அடையாளம் கண்டது ஆண்டர்சன் தான்! சதத்திற்கு பின் ஜடேஜா நெகிழ்ச்சி

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ஜடேஜா அருமையாக பேட்டிங் ஆடினார். ஆஃப் ஸ்டம்ப்பை ஒட்டி வந்தால் மட்டுமே பேட்டால் ஆடினார். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற அனைத்து பந்துகளையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் விட்டுவிட்டார். விராட் கோலிக்கு அந்த தெளிவு வரவேண்டும். ஜடேஜா அதை அருமையாக செய்தார் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios