Asianet News TamilAsianet News Tamil

வெறும் இரண்டே விக்கெட்.. டி20 கிரிக்கெட்டில் பும்ராவிற்காக காத்திருக்கும் அபார சாதனை..!

ஸ்காட்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி ஆடவுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைக்க ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு வெறும் இரண்டே விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
 

jasprit bumrah 2 wickets away from massive record in t20 cricket
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 5, 2021, 2:59 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.

அரையிறுதிக்கு க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக தகுதிபெற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. 

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்விகளை தழுவிய இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க - இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து டெஸ்ட்,டி20 அணிகள் அறிவிப்பு! 2 பெரிய வீரர்களுக்கு அணியில் இடம் இல்லை

எனவே இந்திய அணிக்கான அரையிறுதி கதவு திறந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி ஸ்காட்லாந்தையும், நமீபியாவையும் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தானை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்திய அணி, ஸ்காட்லாந்தையும் நமீபியாவையும் வீழ்த்தினாலும், ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தவில்லை என்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

இப்படியான சூழலில், கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி, இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்

ஜஸ்ப்ரித் பும்ரா இதுவரை 51 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 49 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை(64) வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆடவில்லை. அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் இந்த தொடரில் ஆடியிருந்தால், பும்ராவிற்கு சாஹலின் சாதனையை முறியடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்..! இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

2016ம் ஆண்டிலிருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிவருகிறார் பும்ரா. பும்ராவின் வருகைக்கு பிறகுதான் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டே உலகத்தரம் வாய்ந்த மிரட்டலான, வலுவான பவுலிங் யூனிட்டாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

Follow Us:
Download App:
  • android
  • ios