Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்..! இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

rahul dravid appointed as head coach of team india by bcci
Author
Chennai, First Published Nov 3, 2021, 9:24 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அடுத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஐபிஎல் 14வது சீசன் முடிவடைந்த தருவாயில், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் டிராவிட். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க, அந்த சந்திப்பின்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவலை செய்தித்தாள்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும் துபாயில் தன்னை சந்தித்தபோது என்சிஏ-வின் வளர்ச்சி குறித்துத்தான் ராகுல் டிராவிட் பேசியதாகவும், டிராவிட் பயிற்சியாளராக விரும்பினால், அவர் விண்ணப்பிக்கலாம் என்றும் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்த கடைசி நாளன்று, ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததை விண்ணப்பித்தார். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் விண்ணப்பித்தது வெறும் சம்பிரதாயம் தான்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டை அதிகாரப்பூர்வமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தன்னலமற்ற, லெஜண்ட் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இன்னும் பல உயரங்களை எட்டுவது உறுதி. ராகுல் டிராவிட்டின் பயிற்சிக்காலத்தில் இந்திய அணியின் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios