Asianet News TamilAsianet News Tamil

இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து டெஸ்ட்,டி20 அணிகள் அறிவிப்பு! 2 பெரிய வீரர்களுக்கு அணியில் இடம் இல்லை

இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

new zealand test and t20 squads announced for india tour
Author
New Zealand, First Published Nov 5, 2021, 2:35 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வரும் 14ம் தேதியுடன் (நவம்பர் 14) டி20 உலக கோப்பை தொடர் முடிவடையும் நிலையில், இது முடிவடைந்த மாத்திரத்திலேயே நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

நவம்பர் 14ம் தேதி டி20 உலக கோப்பை ஃபைனல் நடக்கும் நிலையில், நவம்பர் 17ம் தேதி முதல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான தொடர் தொடங்குகிறது.

நவம்பர் 17, 19, 21  ஆகிய தேதிகளில் முறையே, ஜெய்ப்பூர், ராஞ்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. நவம்பர் 25 - 29ல் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரிலும், டிசம்பர் 3 - 7ல் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவிலும் நடக்கின்றன.

இந்த இந்தியா - நியூசிலாந்து தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்..! இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் ஆடுகிறார் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட். டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடும் டிரெண்ட் போல்ட் டெஸ்ட் அணியில் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக பயோபபுளில் இருந்து கிரிக்கெட் ஆடிவரும் டிரெண்ட் போல்ட்டுக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் அவரை எடுக்கவில்லை. 35 வயதான ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோம் டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 2 அணிகளிலுமே இடம் பெறவில்லை.

இதையும் படிங்க - ஸ்காட்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் மாற்றம்..? உத்தேச ஆடும் லெவன்

நியூசிலாந்து டி20 அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மார்டின் கப்டில், கைல் ஜாமிசன், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே.

நியூசிலாந்து டெஸ்ட் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, கைல் ஜாமிசன், டாம் லேதம், ஹென்ரி நிகோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் ஃபிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், வில் சோமர்வில், டிம் சௌதி, ரோஸ் டெய்லர், வில் யங், நீல் வாக்னெர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios