ODI கிரிக்கெட்டில் முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி இஷான் கிஷன் வரலாற்று சாதனை! எலைட் லிஸ்ட்டில் இணைந்தார்
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதல் சதமடித்த இஷான் கிஷன், முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுகிறார். தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
ஐபிஎல் 2023: Impact Player விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்..? தெளிவுபடுத்துமா பிசிசிஐ..?
வங்கதேச அணி:
அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), யாசிர் அலி, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், எபடாட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்கம் முதலே அடித்து ஆடி சதமடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய விராட் கோலியும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய இஷான் கிஷன், அதன்பின்னர் சிக்ஸர் மழை பொழிந்து வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கி முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த 7வது வீரர் என்ற சாதனையை படைத்தார். சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, வீரேந்திர சேவாக், மார்டின் கப்டில், ஃபகர் ஜமான் ஆகியோர் வரிசையில் எலைட் லிஸ்ட்டில் இணைந்தார்.
இந்திய அணியின் தலைமை தேர்வாளராகும் தரமான முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்..?
அதிரடியாக ஆடிய இஷான் கிஷன், 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனும் கோலியும் இணைந்து 290 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி சதத்தை நெருங்கிவருகிறார். இந்திய அணி 36 ஓவரில் 306 ரன்களை குவித்து ஆடிவருகிறது.