ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடிக்க தோனி தான் காரணம் என்று சமூக வலைதள பக்கத்தில் தல ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தியா நடத்தும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், நேற்று நடந்த முக்கியமான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
ஒருகட்டத்தில் 18.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே களத்தில் இருந்தார். அவர் 22 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்கினார்.
இதையடுத்து மேக்ஸ்வெல் 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு, 76 பந்துகளில் சதம் விளாசினார். இந்த நிலையில் தான் அவர் வின்னிங் ஷாட் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தததோடு ஒரு நாள் போட்டிகளில் அதுவும் உலகக் கோப்பையில் 201 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதில், 10 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலமாக மும்பை வான்கடே மைதானத்தில் 291 ரன்களை சேஸ் செய்து அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. மேலும், 3ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான், கிளென் மேக்ஸ்வெல் 201 ரன்கள் அடிக்க தோனி தான் காரணம் என்று தல தோனி ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
தோனி மற்றும் மேக்ஸ்வெல் இவர்களில் சிறந்த பினிஷர் யார் என்ற கேள்வி சமூக வலைதள பக்கத்தில் எழுந்தது. அதற்கு தோனி ரசிகர், மேக்ஸ்வெல்லின் மேட்ச் வின்னிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு, மேக்ஸ்வெல்லின் வாழ்க்கை துணைவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆதலால், நீங்கள் இப்படியொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டீர்கள்.
தோனிக்கும், மேக்ஸ்வெல்லின் மனைவியான வினி ராமனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் சென்னை. தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது. வினி ஒரு இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய குடிமகன் ஆவார், அவர் மெல்போர்னில் ஒரு மருந்தாளுநராக உள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் கபில் தேவ் 175 ரன்கள் சாதனையை முறியடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை!
